ஆகாய தாமரை செடிகள் அகற்றம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் குளத்தில் ஆகாய தாமரை செடிகள் அகற்றப்பட்டது.
ஆகாய தாமரை செடிகள் அகற்றம்
ஆகாய தாமரை செடிகள் அகற்றம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள மக்களுக்கு நீராதாரமாக இருக்கக்கூடியது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் ஆகும். 

 இந்த குளத்தில் நீர் இருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முழுவதும் உள்ள அனைத்து போர்களிலும் தண்ணீர் குறைவின்றி இருக்கும். நீர்இல்லை என்றால் அனைத்து போர்களிலும் தண்ணீர் இல்லாமல் சிரமமான சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்படும். 

திருமுக்குளத்தில் இருக்கும் நீரை பாதுகாக்க நகராட்சியில் இருந்து  ஆண்டாள் கோவில் நிர்வாகத்திடம் திருமுக்குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றதலைவர் தங்கம் ரவி கண்ணன் ஆகாயத்தாமரை இலைகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். 

ஆணையாளர் மல்லிகா, ஆண்டாள் கோவில் கண்காணிப்பாளர் வசந்தா,  நகர்நல அலுவலர் கவிப்பிரியா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com