2-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

2-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான ஆயத்த பணிகள் தொடக்கங்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன.
அகழ்வாராய்ச்சி தொடங்குவதற்காக ஆயத்தப்பணிகள் நடைபெற்ற போது எடுத்த படம். 
அகழ்வாராய்ச்சி தொடங்குவதற்காக ஆயத்தப்பணிகள் நடைபெற்ற போது எடுத்த படம். 
Published on

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட விஜயகரிசல்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.

இதில் பழங்கால சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய் உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும் விஜயகரிசல் குளத்தில் சங்கு வளையல் தயாரிப்பு கூடம் இருந்த தற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன. அத்தோடு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன.

தமிழர்களின் நாகரீகம் மற்றும் பழமைகள் குறித்து மேலும் கண்டறிய வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுப்பணி நடத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் 2-ம் கட்ட அகழாய்வு பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று தொடங்கின.

அகழ்வாரா ய்ச்சிக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணியும், குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி போன்றவை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com