ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளைத் தலைவர் பிலாவடியான் தலைமை தாங்கினார்.

கருப்பையா புஷ்பம், சிவயோகம், ராம சீனிவாசன், காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் சி.ஐ.டி.யு. நகர கன்வீனர் வீர சதானந்தம் போன்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் சரசுவதி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறை ஊழியர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com