சமுதாயக்கூடம்- அங்கன்வாடி மையங்கள் திறப்பு

சமுதாயக்கூடம்- அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
சமுதாயக்கூடம்- அங்கன்வாடி மையங்கள் திறப்பு
Published on

விருதுநகர்

விருதுநகர் யூனியன் ஆமத்தூர் கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், ரூ. 23.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 2 அங்கன்வாடி மைய கட்டிடங்களை விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இந்த விழாவில் விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், கற்பக வல்லி, யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், ஆமத்தூர் பஞ்சாயத்து தலைவர் குறிஞ்சி மலர், அழகர்சாமி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com