ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் அழகப்பன் நன்றி கூறினார்.
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 மற்றும் 4-ம் வகுப்பு கற்று தரும் ஆசிரியர்களுக்கு கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. சென்னையில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் நடராஜ் தலை மையில், மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதனை மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவ னத்தின் முதல்வர் வெள்ளைத்துரை நேரில் பார்வையிட்டார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் செய்தி ருந்தனர். பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் அழகப்பன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com