மக்களை பற்றி சிந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு நேரமில்லை-ராஜேந்திரபாலாஜி பேச்சு

மக்களை பற்றி சிந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு நேரமில்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மக்களை பற்றி சிந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு நேரமில்லை-ராஜேந்திரபாலாஜி பேச்சு
Published on

விருதுநகர்

விருதுநகர் மேற்கு மாவட்ட வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் பால், மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து மாவட்ட மைய நூலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது;-

தி.மு.க. ஆட்சியில் மகனுக்கு பட்டாபிஷேகம், அதிகாரதுஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களில் விலைவாசி கள் தாறுமாறாக உயர்ந்து விட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தை பற்றியே சிந்திக்கிறார். மக்களை பற்றி சிந்திக்க அவருக்கு நேரமில்லை. தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com