2-வது கணவரின் உறவினரை காணவில்லை

2-வது கணவரின் உறவினரை காணவில்லை என கோர்ட்டில் பெண் புகார் செய்துள்ளார்.
காணவில்லை
காணவில்லை
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் சர்க்கரைகுளம் தெருவை சேர்ந்தவர் அனிதா(47).  இவரது2-வது கணவர் கேரளாவைச் சேர்ந்தவர்.  கடந்த மாதம் 5-ந்தேதி இவர்  கேரளாவில் இறந்து விட்டார்.   அவரது உறவினர் கேரளாவைச் சேர்ந்த சித்தாரங்கதன்  என்ற குஞ்சுமோன். அனிதாவின் 2-வது கணவர் இறந்தபோது அனிதாவிற்கு உதவியாக  அனைத்து உதவியும்  செய்துள்ளார். 

இதனால் அனிதாவுக்கும், குஞ்சுமோனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி  ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழில் செய்யவேண்டுமென அனிதாவிடம்  தெரிவித்த குஞ்சுமோன் ஸ்ரீவில்லி புத்தூர்  தெற்கு பட்டியில் வீடு பிடித்து தங்கி  இருந்தார். 

அதன் பிறகு கடந்த 3 நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர்  கீழ ரத வீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அனிதா தனியார்  விடுதிக்கு சென்று விசாரித்தபோது   அறையை காலி செய்து விட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். 

பல இடங்களில் தேடி பார்த்தும் குஞ்சுமோனை  கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து அனிதா ஸ்ரீவில்லிபுத்தூர்  போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து   குஞ்சுமோனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com