வாலிபரை கடத்தி தாக்கி கொலைமிரட்டல்

விருதுநகர் அருகே வாலிபரை கடத்தி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை கடத்தி தாக்கி கொலைமிரட்டல்
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள பழைய செந்நெல்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது32). முதுகலை பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளம் பஸ்சில் சென்று வந்த போது விஜயகரிசல்குளத்தை சேர்ந்த மாரீஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாரீஸ்வரியின் கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் தான் அவருக்கும், முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதனை பயன்படுத்தி மாரீஸ்வரியிடம் இருந்து நகைகளை வாங்கி ரூ.3.50 லட்சத்திற்கு முருகன் அடகு வைத்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பகுதியில் முருகன் நின்று கொண்டிருந்த போது மாரீஸ்வரியின் சகோதரன் மாரீஸ்வரன் அவரது நண்பருடன் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து முருகனை இருசக்கர வாகனத்தில் விஜயகரிசல்குளம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாரீஸ்வரியின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரும் வந்துள்ளனர். 4 பேரும் சேர்ந்து முருகனை கடுமையாக தாக்கினர்.

மேலும் மாரீஸ்வரி யுடனான தொடர்பை கைவிட வேண்டும் என்றும், நகைகளை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறி எச்சரித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த முருகன் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com