

சிவகாசி
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த சரவணன். அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதி. பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள்கள் அஸ்வினிபிரியா 11-ம் வகுப்பும், ஹேமலதா 10-ம் வகுப்பும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் இந்தியா சார்பில் இந்த சகோதரிகள் பங்கேற்றனர்.
இதில் 16 வயதிற்குட்பட்ட பிரிவில் அஸ்வினிபிரியாவும், 15 வயதுக்குட்பட்ட பிரிவில் ஹேமலதாவும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த சகோதரிகளின் சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற திருத்தங்கல் சகோதரிகளை பள்ளி தாளாளர் கணேசன் மற்றும் தலைைமை ஆசிரியர் ஆகியோரும் பாராட்டினர்.