இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமாகி 2 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் தெரிவித்துள்ளார்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விருதுநகர்

சென்னை அண்ணாநகர் கொருக்குபேட்டையை சேர்ந்தவர் மீனாட்சி (வயது44). இவரது மகள் தீபா (26). இவருக்கும், விருதுநகர் கடம்பகுளம் பகுதியை சேர்ந்த சரவணக் குமார் என்பவருக்கும் கடந்த ஜூன் 1-ந் தேதி திருமணமானது.

இந்த நிலையில் 1 மாதத்திற்கு பின்பு கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த பெண் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கணவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வருவதாகவும் தாயிடம் தீபா கூறியுள்ளார்.

அப்போது மீனாட்சி மகளை சமாதானம் செய்து பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் மீனாட்சி தீபாவை செல்போனில் அழைத்து ள்ளார். ஆனால் தீபா அழைப்பை ஏற்கவில்லை. இந்த நிலையில் மாலையில் தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மீனாட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விருதுநகர் வந்த போது மீனாட்சி உடல் சவக்கிடங்கில் வைக்கப் பப்பட்டுள்ளதாகவும், அவரை காண முடியாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்ப தாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூலக்கரை போலீஸ் நிலையத்தில் மீனாட்சி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com