

விருதுநகர்
மகாத்மா காந்தியின் 125வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக காந்தி அமைதி பரிசு விருது 2022ம் ஆண்டிற்கு இந்திய அரசால் வழங்கப்பட உள்ளது. மகாத்மா காந்தி வழியில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் அனைவரும் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
விருது குறித்த விபரங்கள் www.indiacu lture.nic.in என்ற இந்திய அரசின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம், விண்ணப்பங்கள் இணை தளம் மூலமாக வருகிற 15ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 10ஆண்டுகளாக புத்தகம் எழுதுபவர்களின் விண்ணப்பம் கருத்தில் எடுத்து கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.