இலவச மருத்துவ முகாம்

காசநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இலவச மருத்துவ முகாம்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் சக்க ராஜாக்கோட்டை மூதனூர் தாயாதியார் சாவடி வளாகத்தில் தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக சக்காராஜா கோட்டை சத்திரிய ராஜூக்கள் பொது மகாசபையும், விருதுநகர் மாவட்ட காசநோய் கழகமும் இணைந்து காசற்ற இலவச காசநோய் கண்டறியும் முகாமை நடத்தியது.

முகாமில் சக்கராஜாக் கோட்டை சத்திரிய ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா, ரவிராஜா, ஜெகநாத ராஜா, பலராம ராஜா, நகராட்சி ஆணையாளர். பார்த்தசாரதி மற்றும் சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் காசநோய் கண்டறி யப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனை மூலம் தொடர்பு கொள்ளப்படு வார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அவர்களது இல்லம் தேடி வந்து விடும் என தெரிவிக்கப்பட்டது.

காச நோயற்ற தமிழகம் காண்போம் என்ற தலைப்பில் (காசற்ற) இலவச முகாம் சிறப்பாக நடத்தியதை சமூக ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டினார்கள்.

முகாம் ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் மற்றும் தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com