மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா

மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் வழங்கினார்.மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற மாற்றுத்திறனாளி இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வ ீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com