இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.மல்லிகை லயன்ஸ் சங்க பெண்கள் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
இலவச கண் சிகிச்சை முகாம்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் அமரர் ராமலிங்கம்- சரோஜா தம்பதியினரின் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடை பெற்றது. முகாமை லயன்ஸ் கிளப் ஆப் ராஜபாளையம் டவுண் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு ராஜபாளையம் டவுண் லயன்ஸ் சங்க தலைவர் ஸ்டேன்லி பிரின்ஸ் சித்ரராஜ் தலைமை தாங்கினார். அக்னி என்ற ரவி முன்னிலை வகித்தார். தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி தலைவர் இசக்கி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட பலர் முகாமில் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். ராஜ பாளையம் மல்லிகை லயன்ஸ் சங்க பெண்கள் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com