ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தேர்வு

ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 20 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்கு பொருட்களும், 5 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டது.
ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தேர்வு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. மாவட்ட ஆளுநர் முத்து சிறப்புரையாற்றினார்.

தலைவராக ஜெய கண்ணன், செயலாளராக ராம்குமார், துணைத் தலைவராக ரவி, இணைச் செயலாளராக கார்த்திக், பொருளாளராக ஸ்ரீராம், உடனடி முன்னாள் தலைவராக கண்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். சிறப்பு அழைப்பாளராக லட்சுமி நாராயணன், துணை ஆளுநர் முத்துராமலிங்ககுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். 20 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்கு பொருட்களும், 5 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டது.

மூத்த உறுப்பினர்கள் முத்து, லட்சுமணன், பெரியசாமி, கருமாரி முருகன், வெங்கடாசலம், அழகர்சாமி கிருஷ்ணன், முனிராஜ், சசி கண்ணன், நடராஜன் புதிய உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், ராம்குமார், வினோத் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com