இரு தரப்பினரிடையே மோதல்; 2 கிராமங்களில் போலீஸ் குவிப்பு

இரு தரப்பினரிடையே மோதல்; 2 கிராமங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இரு தரப்பினரிடையே மோதல்;  2 கிராமங்களில் போலீஸ் குவிப்பு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராஜ கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது26). இவர் புல்ல நாயக்கன்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்றது.

இதையடுத்து அருகில் விசாரித்து ரவி என்பவரி டம் சென்று பெட்ரோல் கேட்டுள்ளார். அதற்கு அவர் இங்கு பெட்ரோல் கிடைக்கும் என யார் சொன்னது என விசாரித்த தாகவும், இதுகுறித்து இரு வருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு வரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டதாகவும் கூறப்படு கிறது.

இவர்களின் வாக்கு வாதத்தை கேட்டு இருவருக்கும் தெரிந்த நபர்கள் அந்தப் பகுதியில் திரண்டதால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் சிலர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். கலைந்து செல்லும் போது ஒரு தரப்பினர் மேலையூர் கிராமத்தில் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சரவணகுமார் அளித்துள்ள புகாரில், ரவி தரப்பினர் தங்களிடம் அவதூறாக பேசி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி தரப்பில் அளிக்கப் பட்டுள்ள புகாரில் சரவண குமார் தரப்பினர் வீட்டுக்குள் புகுந்து பெண்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டு களை கூறி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. பரளச்சி போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் நிலையில் 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com