மோட்டார் சைக்கிள்கள் மோதல்; நெசவு தொழிலாளி பரிதாப சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் நெசவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார். பால் வியாபாரி படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; நெசவு தொழிலாளி பரிதாப சாவு
Published on

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 35). நெசவு தொழிலாளியான இவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

நெசவாளர் காலனி அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சந்திரகுமார் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பால் வியாபாரி அருள் பாண்டி என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது சந்திரகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த சந்திகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த அருண்பாண்டியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அருப்புக் கோட்டை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திர குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com