இருக்கன்குடியில் ரூ.81 லட்சம் உண்டியல் வசூல்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.81 லட்சம் உண்டியல் வசூலானது. உண்டியல் என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி.ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இருக்கன்குடியில் ரூ.81 லட்சம் உண்டியல் வசூல்
Published on

சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதம் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி 10 நிரந்தர உண்டியல், 4 தற்காலிக உண்டியல்கள் உள்பட 14 உண்டியல்கள் திறக்கப்பட்டது. அதில் ரூ. 81 லட்சத்து ஆயிரத்து 488-ம். தங்கம்- 309 கிராம்.வெள்ளி- 1014 கிராம் கிடைத்தது. உண்டியல் என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி.ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம், மகாராஜன், நவரத்தினம், மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com