இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.80 லட்சத்து 79 ஆயிரம் வசூல்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.80 லட்சத்து 79 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில்   உண்டியல் மூலம்  ரூ.80 லட்சத்து 79 ஆயிரம் வசூல்
Published on

சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.இங்கு ஆடி மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த வருடம் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடந்தது. விழா நேற்று முடிந்த நிலையில் ேகாவிலில் வைக்கப்பட்டிருந்த 4 தற்காலிக உண்டியல், 10 நிரந்தர உண்டியல், ஒரு கால்நடை உண்டியல், ஒரு அன்னதானம் உண்டியல் ஆகியவை கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.80 லட்சது 79 ஆயிரத்தி 888 பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.

இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர், இந்து அறநிலைய துறை கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் கோவில் அறங்காவலர் குழு தலை வர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு வினர், ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வை யிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com