மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியல்

மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியல்
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வடபுறம் சர்ச் தெரு, எதிர்புறம் 7 தெருக்களும் உள்ளன. இதில் இரு சமுதாயத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்ச் தெரு பகுதியில் சில இளை ஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியில் 7-வது தெருவை சேர்ந்த இளை ஞர்கள் சென்று கொண்டி ருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு மதுபாட்டில் களை தட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இதில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சர்ச் தெருவை சேர்ந்த ஏசா. மணிகண்டன், மணி உள்ளிட்ட 4 இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப் பட்டது. இதை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் பழைய பஸ் நிலையம் அருகே மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்பொழுது விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அந்த வழியாக வந்த பொழுது அவர் வாகனத்தை மறித்து தங்கள் பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட னர். உடனடியாக போலீசார் அவர்களை அப்புற படுத்தினர்.

பின்னர் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த மறியல் போ ராட்டத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com