மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு
Published on

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியை சேர்ந்தவர் காயத்ரி(வயது26). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் எனக்கும், உறவினர் பிரியதர்சன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. பிரியதர்சன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இதனால் நான் எனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டேன்.

இந்த நிலையில் எனது நகையை விற்று கார் வாங்கியதோடு பிரியதர்சன், சிவானந்த லட்சுமி என்பவரை 2-வது திரும ணம் செய்துள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனவே இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சம்பந்தப் பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பிரியதர்சன், அவரது பெற்றோர் பரமசிவம்-செல்வி, சகோதரர் பிரசன்ன குமார் உள்பட 8 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com