பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. கார்த்திகை மாதம் 1-ந் தேதி பூக்கத் தொடங்கி கார்த்திகை மாத முடிவிற்குள் இது பூத்து முடிந்து விடும் தன்மை வாய்ந்தது.
பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்.
பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்.
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவதானம் சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத் தோப்பு பகுதிகளில் தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இது தமிழக அரசின் மலராகும்.

பார்ப்போருக்கு ரம்மிய மாக காட்சி அளிக்கும் இந்த மலர்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. கார்த்திகை மாதம் 1-ந் தேதி பூக்கத் தொடங்கி கார்த்திகை மாத முடிவிற்குள் இது பூத்து முடிந்து விடும் தன்மை வாய்ந்தது.

இதற்கு கார்த்திகைப்பூ என்றும், கண்வழிப்பூ என்றும் பெயர்கள் உண்டு. இது மிகுந்த மருத்துவ குணமுடையது. அரிய வகையான இந்த செடியின் மலர்கள், கிழங்கு, வேர் போன்றவை சித்த மருத்து வத்தில் முக்கியமாக இடம் வகிக்கிறது.

தேனி மாவட்டம் போடி, பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பகுதிக்கு வந்து சித்த மருத்துவத்திற்காக செங்காந்தள் மலர்களின் வேர்களை பறித்து கிழங்கை எடுத்துவிட்டு செடிகளை போட்டுவிட்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக கார்த்திகை மாத தொடக்கத்திலேயே பூத்துக் குலுங்கும் இத்தகைய மலர்கள் சித்த மருத்துவ சேகரிப்பாளர்களால் அழியும் நிலை ஏற்படுகிறது.

இத்தகைய அரிய வகை மலர்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு வேளாண்மை துறை மற்றும் இதர துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com