ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

ராஜபாளையத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார். மோசமான சாலையால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
Published on

ராஜபாளையம்

சிவகாசி காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர் தளவாய்பாண்டியன் (வயது45), ஆட்டோ டிரைவர். இவர் காக்கிவாடன்பட்டியில் இருந்து சவாரி ஏற்றி கொண்டு ராஜபாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்குள் சிக்கிய தளவாய் பாண்டியன் காயமடைந்து பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து தளவாய் பாண்டியன் மகன் முரளி மனோஜ் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமலும், செப்பனிடபடாமலும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை களை விரைவாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ராஜபாளையம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் சாலைகளில் புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்தில் சிக்குகின்றனர். தொடர் விபத்துக்களையும், உயிர் பலிகளையும் தடுக்க முறையான வடிகால் வசதியுடன் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com