பாலிடெக்னிக்கில் ரூ.41 ½ லட்சம் மோசடி

தனியார் பாலிடெக்னிக்கில் ரூ.41 ½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக்கில் ரூ.41 ½ லட்சம் மோசடி
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரி நிர்வாக குழு தலைவர் சுதர்சன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் எங்களது கல்லூரியில் 2017-18, 2019-20 ஆகிய ஆண்டின் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை ஆய்வு செய்த போது கல்லூரியில் கணக்காளராக பணிபுரிந்த சிவகாசி செங்கமலநாச்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஜோசப் லயோலா (47) மற்றும் சிவகாசி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த செல்வசுதா (35) ஆகியோர் ரூ.48 லட்சத்து 5 ஆயிரத்து 863 மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக 2 பேரிடமும் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜோசப் லயோலா ரூ.6 லட்சத்தை திருப்பி கொடுத்து விட்டார். மீதமுள்ள 41 லட்சத்து 51 ஆயிரத்து 863 ரூபாயை 2 பேரும் மோசடி செய்து விட்டனர் என கூறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பணம் மோசடி செய்த ஜோசப் லயோலா, செல்வசுதா ஆகிய 2 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com