பெண்களை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு

பெண்களை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர்.
பெண்களை தாக்கிய  தந்தை-மகன் மீது வழக்கு
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க வேல்.இவரது மனைவி பாக்கியம் (வயது54). இதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவர் மகன் பிள்ளையார் சித்தன் (27). இவர் பாக்கியம் வீடு அமைந்துள்ள சந்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.

இதனால் விபத்து ஏற்படும் என்று பாக்கியம் அவரை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக பிள்ளையார் சித்தன், தனது தந்தை ராமரிடன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் ஆகியோர் பாக்கியத்துடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.

அதனை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டுப் பெண் மேகலா (30)என்பவரையும் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த 2 பெண்களும் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா பெண்களை தாக்கிய ராமர் மற்றும் பிள்ளையார் சித்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com