கண்மாயில் மூழ்கி 8 வயது சிறுமி சாவு

கண்மாயில் மூழ்கி 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்மாயில் மூழ்கி 8 வயது சிறுமி சாவு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 8 வயதில் பிரீத்தி என்ற மகள் இருந்தாள்.

இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிரீத்தி அதே பகுதியை சேர்ந்த அன்பழகி என்ற சிறுமியுடன் தண்டியனேந்தல் கண்மாய்க்கு சென்றார். தண்ணீரை பார்த்ததும் 2 பேரும் கண்மாயில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது.

விளையாட்டின் மீதான ஆர்வத்தால் பிரீத்தி ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினாள். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறிய அவர் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பிரீத்தியின் உடலை பார்த்து அவளது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com