காதல் தோல்வியில் வடமாநில வாலிபர் தற்கொலை

சிவகாசி அருகே காதல் தோல்வியில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் தோல்வியில் வடமாநில வாலிபர் தற்கொலை
Published on

விருதுநகர்

விருதுநகர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹனீப்அலி. இவரது மகன் ஹபிதுல் ஹக்(19). இவர் தனது ஊரில் உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ஹபிதுல் ஹக் சிவகாசி சிட்கோவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு மகனை பார்க்க அவரது பெற்றோர் வந்த னர். அப்போது காதலித்த பெண்ணை மறந்து விடுமாறும், வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் ஹபிதுல் ஹக் இதனை ஏற்கவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தத்தில் தான் தங்கியிருந்த அறையில் ஹபிதுல் ஹக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஹனீப்அலி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் 

X

Maalai Malar
www.maalaimalar.com