மாட்டுவண்டி தலையில் ஏறி வாலிபர் பலி

விருதுநகர் அருகே மாட்டுவண்டி தலையில் ஏறி வாலிபர் பலியானார். இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
மாட்டுவண்டி தலையில் ஏறி வாலிபர் பலி
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பொன்ராஜ்(வயது 30 )இவர் மாட்டு வண்டி ஓட்டி வந்தார். நேற்று அவர் கும்பமலை அடிவாரத்தில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவர் தலையில் மாட்டுவண்டி ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com