புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் மாயம்

விருதுநகர் மாவட்டத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் மாயமாகினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் மாயம்
Published on

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாளையம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவர் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மதுரைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ராஜ்குமாரின் சகோதரி சத்யவாணி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் அருகே உள்ள மணியம்பட்டியை சேர்ந்தவர் மைக்கேல். வெளியூரில் வேலை பார்க்கிறார். இவருக்கு அன்னலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற அன்னலெட்சுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மைக்கலின் தாயார் ராணி அளித்த புகாரின் பேரில் அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள நாட்டா மங்கலத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 17 வயது மகள் சிவகாசி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று மொபட்டில் கல்லூரி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மாரி முத்து அளித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com