இளம்பெண், பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயம்

இளம்பெண், பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண், பிளஸ்-2 மாணவி  உள்பட 3 பேர் மாயம்
Published on

விருதுநகர்

திருச்சுழி அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் வில்வராணி(வயது40), இலுப்பைகுளம் நடுநிலைப்பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் வில்வராணியின் தங்கை வீட்டில் தங்கி திருச்சுழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் வெளியே செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் வில்வராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டையதேவன் பட்டியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி முத்து லட்சுமி(27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. சிவா திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால் முத்துலட்சுமி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

அங்கிருந்த அவர் குழந்தைகளை விட்டுவிட்டு மாயமானார். எங்கு சென்றார் என தெரிய வில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு முத்துலட்சுமியின் தந்தை கண்ணன், நத்தம்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.

சாத்தூர் அருகே உள்ள ஏ.புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா(80). வெளியே செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மகள் தமிழ்செல்வி அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com