பெண் உள்பட 2 பேர் மாயம்

விருதுநகர் அருகே பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள். விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இருவரையும் தேடி வருகின்றனர்.
பெண் உள்பட 2 பேர் மாயம்
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள பரங்கிரிநாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருகில் உள்ள மாரிமுத்து என்ற வாலிபருடன் பூங்கொடி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை மணிகண்டன் பலமுறை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் இரவு பார்த்தபோது, மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

விருதுநகர் டவுன் ஜே.சி.பி. காம்பவுண்டை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (45). இவரது மகன் மாரிமுத்து (28). வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகனை கண்டுபிடித்து தருமாறு சுப்புலட்சுமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com