வங்கி ஊழியர்கள் போல் பேசி ரூ.4 லட்சம் மோசடி

விருதுநகரில் வங்கி ஊழியர்கள் போல் பேசி ரூ.4 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மோசடி
மோசடி
Published on

விருதுநகர் 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அன்புராஜ் (46). இவருக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு உள்ளது. சம்பவத்தன்று வங்கி சேவை குறித்த குறைகளை தெரிவிக்க சேவை மையத்திற்கு தொலைபேசி மூலம் அன்புராஜ் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. 

இந்த நிலையில் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்கள் தாங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி அன்புராஜ் வங்கி கணக்கின் முழு விவரத்தையும் கேட்டுள்ளனர்.

இதனை நம்பி அவரும் தனது வங்கி விபரத்தை அந்த நபர்களுக்கு தெரிவித்துள்ளார் இந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து பல தவணைகளில் ரூ. 3 லட்சத்து 81 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புராஜ் மோசடி குறித்து விருதுநகர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com