இணைப்பு சாலை விரிவாக்க பணி

ராஜபாளையம்-தென்காசி இணைப்பு சாலை விரிவாக்க பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்
ஆய்வு
ஆய்வு
Published on

ராஜபாளையம்

சங்கரன்கோவில் ரோடு ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் தென்காசி ரோடு  சக்தி கண் மருத்துவமனை எதிர்புறம்  வரையிலான இணைப்புசாலை அமைய இருக்கும் இடத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் ஆகியோர் முன்னிலையில்  தங்கபாண்டியன் 

எம்.எல்.ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது  தனி டி.ஆர்.ஓ. மற்றும் தனி தாசில்தார்  உட்பட பலர் உடன் இருந்தனர். 30 மீட்டர் அகலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடம் கையகபடுத்தி 10.50 மீட்டர் அகலத்தில்   சாலை அமைத்து,பொது மக்கள்  அச்சமின்றி இரவு நேரங்களில்  வந்து செல்வதற்கு வசதியாக சாலையின்  இருபுறமும் மின் விளக்குகள் அமைத்து    விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்து பணியை விரைந்து முடிக்க   வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.அதிகாரிகளும் விரைந்து பணியை முடிப்பதாக உறுதி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com