வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா

பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். மாணவர்கள் இணைந்து களிமண்ணாலான விநாயகர் சிலையை செய்தனர்.
வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
Published on

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பங்கேற்று பூஜையை வழிநடத்தினார்.

மாணவர்கள் இணைந்து களிமண்ணாலான விநாயகர் சிலையை செய்தனர். விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, பொரி, பழங்கள் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். விநாயகர் சிலையின் முன்பு ஆசிரியர்கள் மலர்களால் கோலமிட்டனர். அருகம்புல், எருக்கலையால் தொடுத்த மாலைகளை விநாயகருக்கு அணிவித்தனர். விநாய கருக்கு பூஜை செய்து வழிபட்ட பின்னர் அனை வருக்கும் பொரி, கொழுக்கட்டை வழங்கினர். விழா வில் ஆசிரியர்கள், அலு வலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com