தசரா ஒலிபெருக்கியை எடுத்து சென்றதால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.

Published on

திசையன்விளை:

இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் இந்து முன்ணியினர் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். அதை தொடர்ந்துகோவில் தர்மகர்தாவிடம் போலீசார் ஒலிபெருக்கியை ஒப்படைத்தனர். பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com