சங்கராபுரத்தில் கிராம மக்கள் சாலை மறியல்

வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக தனி நபருக்கு சொந்தமான இடத்தை நிலம் கையகப்படுத்தும் நடைபெற்றது.ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 சங்கராபுரத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 சங்கராபுரத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காட்டுவன்னஞ்சூர் பகுதியில் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக தனி நபருக்கு சொந்தமான இடத்தை நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.ஆனால் இதுநாள்வரை குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் மேற்படி நிலத்தை அளவீடு செய்வதற்காக தனி நபர் மற்றும் வருவாய்துறையினர் வந்தனர்.ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சங்கராபுரம் -கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் ஆகியோர் இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com