பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் வித்யாரம்பம்

புஷ்பலதா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் கதை பாடல்கள் அடங்கிய புத்தகத்தை மழலையர்களுக்கு வழங்கினார்.
புஷ்பலதா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.
புஷ்பலதா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

நெல்லை:

பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களை பள்ளியில் சேர்க்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக ஏராளமான பெற்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் உதவியுடன் குழந்தைகள் தங்களது பெற்றோர், தாத்தா பாட்டிகள் மடியில் அமர்ந்து அரிசியில் ஓம் மற்றும் அ என்ற எழுத்தை எழுதித் தங்கள் கல்வியைத் தொடங்கினர்.

மழலையர்களை ஊக்கு விக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் கதை பாடல்கள் அடங்கிய புத்தகத்தை மழலையர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மழலை யர்களுக்கு விளையாட்டுகள், குழந்தை பாடல்கள் போன்றவற்றை கற்றுக் கொடுத்தனர். மழலை யர்களும் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com