கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் செய்யுங்கள்- காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் செய்யுங்கள்- காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு
Published on

காஞ்சிபுரம்:

கந்துவட்டி புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.

இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இது போன்று கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com