உடன்குடி அருகே கால்நடை மருத்துவ முகாம்

ஞானியார்குடியிருப்பில் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
உடன்குடி அருகே கால்நடை மருத்துவ முகாம்
Published on

உடன்குடி:

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடன்குடி அருகே உள்ள ஞானியார்குடியிருப்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் தற்காலிக மலட்டுத்தன்மை நீக்குதல், குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம்செய்தல், சினைப் பரிசோதனை, கருவூட்டல் செய்தல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில் ஊராட்சித்தலைவர் காமராஜ், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் செல்வகுமார், கால்நடை டாக்டர் வினோத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com