மாடிப்படியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

தலையில் பலத்த காயம் ஏற்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மாடிப்படியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
Published on

வேலூர்:

விரிஞ்சிபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 56). அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அவரது தங்கை குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டின் மாடிப்படி ஏறிய போது காசிநாதன் தவறி கீழே விழுந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காசிநாதன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com