டிராக்டர் டிரைவர் தற்கொலை

குடும்ப தகராரில் விபரீதம் போலீசார் விசாரணை
டிராக்டர் டிரைவர் தற்கொலை
Published on

வேலூர்:

வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 29) குடிநீர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இன்று அதிகாலை சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com