மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைவீட்டில் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவர் தனது வீட்டில் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com