பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை பேச்சு போட்டி

வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்கலெக்டர் தகவல்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்:

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 6-ந் தேதியும், ஜவகர்லால்நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு 7-ந் தேதியும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டி வேலூர் ஊரீசு கல்லூரியில் நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பு போட்டி அன்று வழங்கப்படும். எனவே வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் மாணவர்கள் பேசுவதற்கு தயார் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com