வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடவடிக்கை மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி
Published on

வேலூர்:

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்று புகைப்பட கண்காட்சி நடந்தது.

இந்த கண்காட்சிக்கு வேலூர் மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் (பொறுப்பு) இளமுருகன் தலைமை தாங்கினார். அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார்.

சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்து 100 புகைப்படங்கள் இன்று முதல் 10 நாட்களுக்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் சுற்றுலா துறை தலைவர் ரவிசங்கர் துணை பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 55 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கோட்டையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுற்றுலாத்துறை சார்பில் வேலூர் டி.கே.எம். கல்லூரியில் பேச்சு கட்டுரை கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com