ஒடுக்கத்தூர் அருகே கந்து வட்டி கேட்டு லாரி டிரைவருக்கு அடி உதை

ரூ 20,000 கடனுக்கு ரூ.2.36 லட்சம் கேட்பதாக புகார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள சேர்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41)இவர் இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். எனது குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். எனது வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்த வேண்டி உள்ளது.

இந்த நிலையில் ஒடுகத்தூரை சேர்ந்த சகோதரர்கள் 3 பேரிடம் நான் ரூ. 20,000 குடும்பச் செலவுக்காக கடன் வாங்கியிருந்தேன். இதற்காக இதுவரை என்னிடம் ரூ.96 ஆயிரம் வட்டி வசூலித்தனர். இன்னும் 1,40,000 தரவேண்டும் என கூறுகின்றனர். நேற்று முன்தினம் இது சம்பந்தமாக என்னை அடித்து உதைத்தனர்.

இதனால் நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். ரூ.20,000 கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதில் இருந்து பாதுகாப்பு வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்‌.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com