செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் லைசென்சு ரத்து

வட்டார போக்குவரத்து அலவலர் நடவடிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் லைசென்சு ரத்து
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து வேலூர் செல்லும் தனியார் பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார். அப்போது அவர் பஸ்சை செல் போனில் பேசியபடி வெகுதூரம் ஓட்டி சென்றுள்ளார்.

இதனை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரு கிறது. இந்நிலையில் இந்த விதிமீறல் வீடியோவை பார்த்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர், சம்மந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தி சோதனை அறிக்கை வழங்கியுள்ளார்.

மேலும் வட்டார போக்குவரத்து அலவலர் வெங்கடேசன்(பொறுப்பு) விதிமீறிய பஸ் டிரைவரின் லைசென்சை 3 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com