பள்ளிகொண்டா அருகே பைக் திருட்டு

சாலையில் நிறுத்திவிட்டு சந்தை வளாகத்திற்கு சென்றார் போலீசார் விசாரணை
பள்ளிகொண்டா அருகே பைக் திருட்டு
Published on: 

அணைக்கட்டு:

அகரம்சேரி அடுத்த காளப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49), கூலித் தொழிலாளி. இவர் தனது பைக்கில் பள்ளிகொண்டா சர்விஸ் சாலையில் நிறுத்திவிட்டு காய்கறிகள் வாங்க சந்தை வளாகத்திற்கு சென்றார்.

பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து மகேந்திரன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com