பெயிண்டருக்கு கத்தி வெட்டு

2 வாலிபர்கள் கைது போலீசார் விசாரணை
பெயிண்டருக்கு கத்தி வெட்டு
Published on

வேலூர்:

வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமி ழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் முகிலன் என்ற குணால் (வயது 23), பெயிண்டர். இவர் கடந்த 16-ந் தேதி இரவு 11 மணியளவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பஸ்நிறுத்தம் அருகே நண்பர்கள் சரவணன், சுரேஷ் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே முகாமை சேர்ந்த பழனி என்ற அர்ஜூனன் (27), மவிஷ் (20) ஆகியோர் திடீரென முகிலனை தகாத வார்த்தைகளால் திட்டிசரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். அப்போது மவிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகிலனின் தலையில் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவருக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து முகிலன் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பழனி, மவிஷ் ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com