த.வெள்ளையன் மறைவு: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடைகள் அடைப்பு-விக்கிரமராஜா அறிவிப்பு

வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் நேற்று மரணம் அடைந்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும்.
த.வெள்ளையன் மறைவு: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடைகள் அடைப்பு-விக்கிரமராஜா அறிவிப்பு
Published on

தூத்துக்குடி:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நாளை(12-ந்தேதி) அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் தாலுகா, பிச்சுவிளை கிராமத்தில் நடைபெற உள்ளது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மறைந்த வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி தெற்கு-வடக்கு மாவட்டத்தில் நாளை ஒருநாள் கடையடைப்பு நடத்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com