வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம்

கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம்
Published on

சிவகிரி:

வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய கணபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்விஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்பிரமணியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, மேலாளர் முனியப்பன், ஓவர்சீஸ் முத்துமாரி, கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முத்துக்குமார், சுரேஷ், உள்ளார் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com